தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் பாதாளச்சாக்கடை கோரிய வழக்கு - மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவு - பொதுநல வழக்கு

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் பாதாளச் சாக்கடை வசதியை ஏற்படுத்தக்கோரிய வழக்கில், திருச்சி மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரைக்கிளை
மதுரைக்கிளை

By

Published : Feb 2, 2022, 3:32 PM IST

மதுரை:திருச்சியைச் சேர்ந்த கேசவன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 24 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. நாள்தோறும் 1000 வழக்கறிஞர்கள் வந்து செல்கின்றனர். நீதிமன்ற வளாகத்தில் 20 கழிவறைகள் உள்ளன.

நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள அனைத்து கட்டடங்களிலும் பாதாளச் சாக்கடை வசதி உள்ளது. ஆனால், திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாதாளச் சாக்கடை வசதி இல்லை.

இதனால் கழிவு நீர்த் தொட்டிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து அலுவலர்களிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆகவே, திருச்சி நீதிமன்ற வளாகத்தில் பாதாளச் சாக்கடை வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, வழக்கு குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் 1.31 கோடி மதிப்பிலான பொருள்கள், பணம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details