தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சாத்தான்குளம் கொலை வழக்கு - உதவி ஆய்வாளருக்கு பிணை மறுப்பு! - சிபிஐ வழக்கு

மதுரை: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன் கொல்லப்பட்ட வழக்கு குறித்து நீதிமன்ற விசாரணை இம்மாதம் தொடங்க இருப்பதால் குற்றவாளிகளுக்கு பிணை வழங்க சிபிஐ தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

case
case

By

Published : Nov 3, 2020, 1:56 PM IST

சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் மாதம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச்செல்லப்பட்டு, அங்கு கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெரும் அழுத்தங்களுக்குப்பின் இவ்வழக்கை சிபிஐ தற்போது விசாரித்து வருகிறது.

இந்நிலையில், தந்தை-மகன் உயிரிழந்த இவ்விவகாரத்தில் உதவி ஆய்வாளர் கணேஷ் மற்றும் காவலர் முருகன் ஆகியோர் பிணை வழங்கக்கோரி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், "உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுப்படி சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்த நிலையில், தற்போது சிபிஐ இவ்வழக்கை விசாரித்து வருகிறது. வழக்குத் தொடர்பான ஆவணங்களை ஏற்கெனவே தடய அறிவியல் துறையினர் சேகரித்து விசாரணையும் முடிவடைந்துள்ளது.

நாங்கள் நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகள் அனைத்திற்கும் கட்டுப்படுவோம், தலைமறைவாக மாட்டோம். எனவே, இந்த வழக்கில் எங்களுக்குப் பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் " எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில், 'வழக்கின் முக்கிய குற்றவாளிகளான கணேஷ் மற்றும் முருகன் ஆகியோர் தான், தந்தை மகன் இருவரையும் மிருகத்தனமாக தாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்கள். காவலர், ரேவதி கொடுத்த வாக்குமூலத்தில் இவர்களின் பங்கு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. எனவே இவர்களுக்குப் பிணை வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும். மேலும், இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணை வரும் நவம்பர் 11ஆம் தேதி மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் தொடங்கவுள்ளது. எனவே, குற்றவாளிகளுக்கு பிணை வழங்கக்கூடாது' என கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி இளந்திரையன், இருவரது பிணை மனுவையும் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: கைதி உயிரிழப்பு குறித்து உடற்கூராய்வில் அதிர்ச்சிகர தகவல்!

ABOUT THE AUTHOR

...view details