மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது ஏராளமான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளைக்கு ஹேப்பி பர்த் டே!
மதுரை: அலங்காநல்லூரில் சிறுவர்கள் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளைக்கு இரண்டாவது ஆண்டு பிறந்த நாளை கேக் வெட்டி கிராமத்து இளைஞர்கள் கொண்டாடினர்.
அப்போது மக்கள் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி எந்த வித இடர்பாடும் இல்லாமல் அனுமதி கிடைத்தால், அலங்காநல்லூர் கிராமம் சார்பாக கோயிலுக்கு சொந்தமாக ஒரு ஜல்லிக்கட்டு காளை வாங்கி வளர்ப்பது என்று முடிவு செய்தனர். அதன்படி அப்பகுதி சிறுவர்களால் சிறிய தொகை வசூல் செய்து ஜல்லிக்கட்டு காளை கன்று ஒன்றை வாங்கி கருப்பன் என பெயர் சூட்டி வளர்த்தனர்.
காளை கருப்பனுக்கு இன்று இரண்டாம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, அலங்காநல்லூரில் உள்ள முணியாண்டி கோயிலில் காளையை சிறப்பாக அலங்கரித்து, அர்ச்சனை செய்து கிராமத்து சிறுவர்கள் கேக் வெட்டி காளைக்கு ஊட்டினர். ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்த நாள் விழாவை சிறுவர்கள் கொண்டாடியதால் அப்பகுதி மக்கள் பலரும் வியப்பில் ஆழ்ந்தனர்.