மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார். மதுரை தேனி பிரதான சாலையில் இவருக்குச் சொந்தமான உணவகம் இயங்கி வருகிறது.
பட்டப்பகலில் ஓட்டலில் திருடிய 3 பேர் கைது! - madurai police
மதுரை: பட்டப்பகலில் உணவகத்திலிருந்து சுமார் பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்ற மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பட்டபகலில் ஒட்டலில் திருடிய 3 பேர் கைது!
சசிக்குமார் உணவகத்தில் இல்லாத நேரத்தில், விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்த மனோகரன், மணிமலை, ஜெகன் ஆகிய மூன்று பேரும் கூட்டாக இணைந்து, சுமார் ஒன்பது லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள உபகரணங்களை இரண்டு மினி வேன்கள் மூலம் திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து சசிகுமாருக்கு தெரியவந்ததையடுத்து, அவர் அளித்த புகாரின் பேரில் அந்த மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.