மதுரையை அடுத்த ஞானஓளிவுபுரம் பகுதியைச் சேர்ந்த ரகுராம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தற்காலிக உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தேன். தமிழ்நாட்டில் அரசு கலைக் கல்லூரிகளில் விலங்கியல் பிரிவு உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பித்தேன்.
முதன்மை செயலர், பல்கலைக்கழக பதிவாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! - madurai high court judgemnet
மதுரை: எம்.எஸ்.சி. ஒருங்கிணைந்த உயிரியியல் படிப்பை எம்.எஸ்.சி. விலங்கியல் படிப்புக்கு இணையானது அல்ல என்ற கல்வித்துறை முதன்மை செயலரின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உயர் கல்வித் துறை முதன்மை செயலர் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆனால் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. நான் படித்த எம்.எஸ்.சி. ஒருங்கிணைந்த உயிரியியல் படிப்பு, எம்எஸ்சி விலங்கியல் படிப்புக்கு இணையானது அல்ல என தமிழ்நாடு உயர் கல்வித் துறை முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து, எம்.எஸ்.சி ஒருங்கிணைந்த உயிரியியல் படிப்பை எம்.எஸ்.சி. விலங்கியல் படிப்புக்கு இணையானதாக கருத உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக உயர் கல்வித் துறை முதன்மை செயலர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.