மதுரை விமான நிலையம் விரிவாக்கப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று(ஜூன்.28) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், வருவாய்த்துறை அலுவலர்கள், விமான நிலைய அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதையடுத்து செய்தியாளர்கள் சந்தித்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளன. மாநில அரசு நிலங்களை கையகப்படுத்தி விமானநிலைய நிர்வாகத்திடம் கொடுத்தால்தான் விரிவாக்கப் பணிகளை தொடங்க முடியும்.
8 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள இந்தத் திட்டத்தில் தற்போது 2 வாரங்களுக்குள் நிலம் கையப்படுத்தப்படும் பணிகள் முடிக்கப்படும். தற்போது வரை 90 விழுக்காடு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன.