ராமநாதபுரம் கீழக்கரை பகுதியைச் சேர்ந்த சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ரகுநாதபுரம் கிராமத்தில் பெரிய ஊரணி அமைந்துள்ளது. இந்த ஊரணி, அருகில் உள்ள பல கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. இந்தப் பகுதியில் மூன்று ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து 10 இடங்களில் மிக ஆழமாக துளையிட்டு ONGC நிறுவனம், அப்பகுதியில் கேஸ் எடுப்பதற்கான வேலைகளை நடத்திவருகிறது.
பெரிய ஊரணி பகுதியில் ஓஎன்ஜிசி கேஸ் நிறுவனம் சார்பாக சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கேஸ் நிறுவன பகுதியிலிருந்து குடியிருப்புப் பகுதி 25 மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. எனவே தீ விபத்து ஏற்படும் பொழுது பொதுமக்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கேஸ் எடுக்கும்போது வெளிப்படும் கழிவு நீர் ஊரணி வழியாக கிராமத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.