தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாலியல் தொல்லை; நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு சும்மா இருக்காது - நீதிபதி எச்சரிக்கை - மதுரை நீதிபதி முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தாக்கல் செய்த அறிக்கை

பணி செய்யும் இடத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சொன்னாலும் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு சும்மா இருக்காது என நீதிபதி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Kamuthi lawyer sexual Harrassment case  Madurai court take severe action against the lawyer  High court never compromised the abuse cases judge  நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு  மதுரை நீதிபதி முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தாக்கல் செய்த அறிக்கை  நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது மதுரை உயர் நீதிமன்றம்
மதுரை உயர் நீதிமன்றம்

By

Published : Dec 24, 2021, 1:41 PM IST

மதுரை: வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் முனியசாமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி தமிழ்நாடு கவுன்சிலுக்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

கமுதியைச் சேர்ந்த ராமநாதன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கமுதி மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளேன். நீதிமன்றத்தில் பெண் ஊழியர் ஒருவருக்கு கமுதி வழக்கறிஞர் சங்கத் தலைவர் முனியசாமி ஏப்ரல் 2021இல் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை

இது தொடர்பாக கமுதி காவல் துறையில் புகார் அளித்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. என் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்ய காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை ஏற்கனவே விசாரனை செய்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், இது தொடர்பாக 'ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி' அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தாக்கல்செய்த அறிக்கையில், சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் தனக்கு வழக்கறிஞர் முனியசாமி தொல்லை கொடுத்துவருவதால், தன்னை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு அவர் வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.

மேலும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை எனத் தெரியவந்தது. இருப்பினும் தான் வேறு நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டதால் முனியசாமி மீதான நடவடிக்கையைத் தொடர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். இதனால் முனியசாமி மீது நடவடிக்கை எடுக்காமல் புகார் முடிக்கப்பட்டது எனக் கூறப்பட்டிருந்தது.

பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி குற்றம்

இதையடுத்து நடந்த வழக்கு விசாரணையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி, "மனுதாரர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தீவிரமானது. நீதிமன்ற பெண் ஊழியர்களின் பாதுகாப்புத் தொடர்பானது. பாதிக்கப்பட்ட பெண் நடவடிக்கையைத் தொடர வேண்டாம் என்றாலும் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது.

நீதிமன்றத்தில் பணி நேரத்தில் பெண் ஊழியரிடம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் போதையில் தவறாக நடக்க முயன்றுள்ளார். சிசிடிவி காட்சியில் நீதிமன்ற பெண் ஊழியரை முனியசாமி கையைப் பிடித்து இழுப்பது பதிவாகியுள்ளது. இது இந்திய தண்டனைச் சட்டம், பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றமாகும்.

எனவே மனுதாரரின் புகாரின்பேரில் காவல் துறை வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முனியசாமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி தமிழ்நாடு கவுன்சிலுக்குப் பரிந்துரைக்க வேண்டும். சம்பவம் தொடர்பாக சிசிடிவி பதிவுகளை பார் கவுன்சில், காவல் துறையினருக்கு வழங்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ஆபாச கானா பாடல்: மன்னிப்பு கேட்ட சரவெடி சரண்;

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details