மதுரை காளவாசல் சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையிலிருந்து காணொலி மூலம் திறந்துவைத்தார். 54.7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம், 2018 ஜூலை 15ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
18 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்ட இந்த மேம்பாலப் பணிகள், இருபத்து மூன்று மாதங்கள் கடந்த பின்னர் இன்று திறந்துவைக்கப்பட்டது. ஏறக்குறைய 250 மீட்டர் நீளமுள்ள இம்மேம்பாலத்தின் எந்தப் பகுதியிலும் விளக்குக் கம்பங்கள் அமைக்கப்படவில்லை.
இரவு நேரத்தில் பயணம்செய்வது மிகுந்த இடர் நிறைந்ததாக உள்ள இந்த மேம்பாலத்தை, அவசர கோலத்தில் திறந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் பிரசன்னா வெங்கடேசனை தொடர்புகொண்டு கேட்டபோது, விளக்குக் கம்பங்கள் அமைப்பதற்கான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், அடுத்த 15 நாள்களுக்குள் விளக்குக் கம்பங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
விளக்குக் கம்பங்கள் அமைக்காமலேயே திறந்துவைக்கப்பட்ட பாலம்! இதையும் படிங்க: பல்வேறு மாவட்டங்களில் புதிய மேம்பாலங்கள்: முதலமைச்சர் திறந்துவைப்பு