மதுரையில் நடைபெற்ற எம்.எம்.எஸ்.வெங்கட்ராமனின் படத்திறப்பு மற்றும் நினைவஞ்சலி கூட்டத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உருவ படத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன் கூறுகையில் "இந்தியாவில் மொழியை வைத்து சர்ச்சையை கிளம்பி உள்ளதாகவும், நாட்டில் உள்ள அனைத்து மொழியும் தேசிய மொழிதான் என்றும் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
அப்படியென்றால் அனைத்து மொழிகளையும் மத்திய அரசு தேசிய மொழியாக அறிவித்து அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க முடியுமா..?. மத்திய அரசு அனைத்து மொழியும் சமம் என்று சொல்லிவிட்டு, இந்தி மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறது.
2024 தேர்தலையொட்டி மத்திய அரசு மொழி கொள்கையை சர்ச்சையாக்க நினைக்கிறது. மத்திய அரசு கலால் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. வரி குறைப்பின் காரணமாக மக்களுக்கு நன்மை கிடைக்கும்.
கலால் வரியை குறைத்த மத்திய அரசு ஏன் செஸ் வரியை குறைக்கவில்லை. கலால் வரி குறைப்பால் மாநில அரசின் வரி வருவாய் பாதிக்கப்படும். 8 ஆண்டுகளில் செஸ் வரியால் மத்திய அரசுக்கு 28 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையில் உள்ள செஸ் வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மீதான செஸ் வரியை ரத்து செய்தால் பெட்ரோல், டீசல் விலை பாதியாக குறையும். ஒரு ஆய்வில் தமிழ்நாட்டில் குடும்ப வன்முறையால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக தெரிகிறது. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை காக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பெட்ரோல் டீசல் வரி குறைப்பால் மக்களுக்கு நன்மை பட்டின பிரவசம் தேவையில்லாத ஒன்று. ஒரு மனிதனை இன்னொரு மனிதன் தூக்க கூடாது. தமிழ்நாட்டில் உள்ள பல ஆதீன மடங்கள் பட்டின பிரவேசங்களை கைவிட்டுள்ளது. பட்டின பிரவேசத்தை வைத்து பாஜக அரசியல் செய்கிறது.
பேரறிவாளன் விடுதலையில் காங்கிரஸ் கட்சி தங்களது நியாயமான கோரிக்கையை முன் வைக்கிறது. நீண்ட காலமாக சிறையிலிருந்தவர்களை பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள் என நாம் பேரறிவாளன் விடுதலையை பார்க்க வேண்டும்.
பேரறிவாளன் விடுதலையில் கொண்டாட வேண்டிய அவசியமில்லை. மாநில உரிமை சார்ந்த தீர்ப்பு என்பதால் இதனை நாம் கொண்டாடலாம். நீண்ட காலமாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய பேரறிவாளன் தீர்ப்பு பயன்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை விடியா அரசு குறைக்குமா...?