தமிழ்நாடு

tamil nadu

சிறுவர் சீர்திருத்த பள்ளி ரகளை ; மாவட்ட முதன்மை நீதிபதி விசாரணை!

By

Published : Oct 8, 2020, 5:29 AM IST

மதுரை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை நீதிபதி நேரில் விசாரணை நடத்தினார்.

juvanile, home, riots, district, magistrate, inquiry  Juvenile Issue; District Chief Justice hearing!  Madurai Juvenile home Issue  சிறுவர் சீர்திருத்த பள்ளி விவகாரம்  மாவட்ட முதன்மை நீதிபதி விசாரணை  மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ரகளை
juvanile, home, riots, district, magistrate, inquiry Juvenile Issue; District Chief Justice hearing! Madurai Juvenile home Issue சிறுவர் சீர்திருத்த பள்ளி விவகாரம் மாவட்ட முதன்மை நீதிபதி விசாரணை மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ரகளை

மதுரை: மதுரை மாநகர் காமராஜர் சாலை பகுதியில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது.

இதில் 36 சிறார் குற்றவாளிகள் தங்கி பயின்று வருகின்றனர். அவர்களில் சிலர் நீதிமன்ற பிணையில் விடுவிக்க கோரி செவ்வாய்க்கிழமை (அக்.6) ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு உள்ள 36 சிறார் குற்றவாளிகளிடையே மோதல் ஏற்பட்டு அனைவரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

மேலும் சீர்திருத்த பள்ளி வளாகத்தில் இருந்த மின்விளக்கு, தொலைக்காட்சிப் பெட்டி, கணினி உள்ளிட்ட மின்சாதன பொருள்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன.

இதன் மதிப்பு சுமார் 10 லட்ச ரூபாய் ஆகும். இந்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சிவபிரசாத் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.

சம்பவத்தில் ஈடுபட்டதாக 18 சிறார் குற்றவாளிகள் மீது சீர்திருத்த பள்ளி கண்காணிப்பாளர் ஷகிலா பானு அளித்த புகாரின் அடிப்படையில் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் 18 பேர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இனிவரும் காலங்களில் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டு விடாமல் தடுக்கும் வகையில் 18 சிறார்களும் தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி நசீமா பானு மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதிகள் நேரில் வந்து சிறார் பள்ளியில் அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளரிடம் விசாரணை நடத்தினார்.

இதையும் படிங்க: ரகளை செய்த சிறார்கள்: மதுரை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details