மதுரை:மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஊமச்சிகுளம், செட்டிகுளம் கிராமத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பினை மூர்த்தி வழங்கினார்.
பிறகு செய்தியாளரைச் சந்தித்த அவர், "கரோனா இரண்டாவது அலையின்போதே படுக்கை வசதி, ஆக்சிஜன் உள்ளிட்ட தேவையான அனைத்து மருத்துவக் கட்டமைப்புகளையும் மேற்கொண்டு தயாராகவைத்துள்ளோம். தற்போதைய மூன்றாவது அலையை எதிர்கொள்ள மதுரை மாவட்டம் தயாராக உள்ளது.
தேவையான கட்டுப்பாடுகளுடன் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிச்சயம் நடைபெறும். அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையைப் பொறுத்தவரை 2006-2011ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தேவையான கட்டமைப்புகளைச் சிறப்பாகச் செய்திருந்தார்.
ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் - அமைச்சர் மூர்த்தி பிறகு வந்த அதிமுக ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாகப் பல்வேறு வகையிலும் சர்க்கரை ஆலையின் பணிகள் முடங்கின. தற்போது தமிழ்நாடு முதலமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு அவையெல்லாம் சீர்செய்யப்படும்" என்றார்.
இதையும் படிங்க:தெலங்கானா பாஜக தலைவர் கைது: ஹைதராபாத்தில் நட்டா...!