தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியர் பாத்திமா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், கடற்கரை பகுதியை ஓட்டிய 500 மீட்டருக்குள் தொழிற்சாலைகள், ஓட்டல்கள் , விடுதிகள் உள்ளிட்ட கட்டுமானங்களை கட்டுவதற்கு முன் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையின்படி, உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று தான் கட்ட வேண்டும்.
இப்படியான முன் அனுமதி பெற்று கட்டப்படும் கட்டுமானங்கள் கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்திற்கேற்ப அனுமதிக்கப்பட்டுள்ளதா, கடற்கரை வாழ் மக்களின் பாதுகாப்பையும் பாதிக்காமல் உள்ளதா என்பதையும் உறுதிபடுத்த வேண்டும். அனுமதி இல்லாமல் கடற்கரையோரம் விதி மீறி கட்டங்கள் கட்டியவர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும்.
ஆனால், கடற்கரையோரம் அனுமதியின்றி கட்டடம் கட்டியவர்களை காப்பாற்றும் வகையில், கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் ஒரு அலுவலக குறிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த குறிப்பாணையின் படி, சட்டத்தை மீறுபவர்களுக்கு பின்- நிலை முறைப்படுத்தும் வாய்ப்பை வழங்குவது ஏற்புடையது அல்ல.
மத்தியச் சுற்றுச்சூழல் அலுவலக குறிப்பாணைக்கு இடைக்கால தடை! - Beach house
கடற்கரையோரம் 500 மீட்டருக்குள் அனுமதி இல்லாமல் கட்டடம் கட்டியவர்கள், அதன் பிறகு அனுமதி பெறலாம் என்ற மத்திய சுற்றுசூழல் அலுவலக குறிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இப்புதிய அறிவிப்பாணையால் அனுமதியின்றி கடற்கரையோரம் கட்டடம் கட்டுவது அதிகரித்து விடும். எனவே, கடற்கரையோரம் அனுமதியின்றி கட்டடம் கட்டியவர்களை காப்பாற்றும் வகையில், கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் வெளிடுள்ள கடற்கரையோரம் 500 மீட்டருக்குள் அனுமதி இல்லாமல் கட்டடம் கட்டியவர்கள், அதன் பிறகு அனுமதி பெறலாம் என்ற மத்திய சுற்றுசூழல் அலுவலக குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடற்கரையோரம் 500 மீட்டருக்குள் அனுமதி இல்லாமல் கட்டடம் கட்டியவர்கள், அதன் பிறகு அனுமதி பெறலாம் என்ற மத்திய சுற்றுச்சூழல் அலுவலக குறிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து மத்திய சுற்றுசூழல் அமைச்சக செயலாளர் பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.