நாடு முழுவதும் சரஸ்வதி, ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, மாணவ-மாணவியர் சரஸ்வதி தேவியை வணங்கும் வகையில் பாடப் புத்தகங்களை வைத்து பூஜை செய்தனர்.
ஆயுத பூஜையை முன்னிட்டு ஏழைக் குழந்தைகளுக்கு ஆய்வாளர் கொடுத்த பரிசு! - inspectors present for ayutha poojai
மதுரை: சரஸ்வதி, ஆயுத பூஜையை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட ஏழை எளிய குழந்தைகளுக்கு திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதனகலா டிபன்பாக்ஸ், புத்தகம், பேனா, பென்சில் போன்ற பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
inspectors present for ayutha poojai
அதன் ஒரு பகுதியாக மதுரை, திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் காவல் நிலைய ஆய்வாளர் மதனகலா, ஆயுத பூஜையை முன்னிட்டு சரஸ்வதி தேவிக்கு பூஜை செய்து, திருப்பரங்குன்றம் சுற்றுப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஏழை எளிய குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களைக் கொடுத்து ஆலோசனை வழங்கினார்.
இதையும் படிங்க: நம் நம்பிக்கை நம்மை நம்ப வைக்கிறது - பிரியா அட்லியின் வைரல் புகைப்படம்!