தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு ஊழியர் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியதைத் திரும்ப பெறக்கோரி மதுரையில் போராட்டம்! - Increasing the retirement age for civil servants held a protest strike in Madurai

மதுரை: அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 58லிருந்து 59ஆக உயர்த்தியதைத், தமிழ்நாடு திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதை திரும்ப பெறக் கோரி மதுரையில் போராட்டம்!
அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதை திரும்ப பெறக் கோரி மதுரையில் போராட்டம்!

By

Published : May 8, 2020, 3:26 PM IST

அரசு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் உள்பட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அனைவரின் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59ஆக உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை தல்லாகுளம் அருகே உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இன்று தமிழ்நாடு அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பை 58 லிருந்து 59ஆக அதிகரித்துள்ள உத்தரவை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க...ஓய்வு பெறும் வயது உயர்வு...இட ஒதுக்கீட்டை பாதிக்கும்!

ABOUT THE AUTHOR

...view details