தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட 6 காவலர்கள் - அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு - மதுரை செய்திகள்

ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் பசுவின் தலையை வீசிச் சென்றதாக கைது செய்யப்பட்ட 4 இஸ்லாமியர்களை குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு, சித்ரவதை செய்த 6 காவல் துறை அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

குற்றத்தை ஒப்புக்கொள்ள மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவலர்கள்
4 இஸ்லாமியர்களை குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு சித்ரவதை செய்த 6 காவல்துறை அலுவலர்கள் மீது

By

Published : Dec 1, 2021, 6:56 PM IST

Updated : Dec 1, 2021, 7:14 PM IST

மதுரை: ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் பசுவின் தலையை வீசி சென்றதாக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட 4 இஸ்லாமியர்களை குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு சித்ரவதை செய்த 6 காவல்துறை அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு மதுரை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் பசுவின் தலையை வீசி சென்றதாக சாகுல் ஹமீது, அல் ஹஜ், ரபீக் ராஜா,ஷாயின்ஷா ஆகிய நால்வரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சிறைக்குள் சித்ரவதை

சிறப்புப்படை உதவி ஆய்வாளர்கள் பார்த்திபன், வெங்கட்ராமன் உள்ளிட்ட 6 காவல் துறை அலுவலர்கள், கைது செய்த நால்வரையும் செல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு நீர், உணவு தராமல் சித்ரவதை செய்துள்ளனர்.

சாகுல் ஹமீது உள்ளிட்ட நால்வரும் இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற நிலையில், குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு காவல் நிலையத்தில் தங்களை துன்புறுத்தியதாகக் கூறி, மாநில மனித உரிமை ஆணையத்தில் கடந்த 2011இல் புகார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

தலா ரூ.1 லட்சம் நிவாரணம்

இந்தப் புகாரை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், காவல் துறையினர், மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாகக் கூறி பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதே போல இதுதொடர்பாக காவல் துறை அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மொழி கடந்து வென்ற 'ஜெய்பீம்'!

Last Updated : Dec 1, 2021, 7:14 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details