தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா தொடர்வதும் குறைவதும் மக்கள் கையில்தான் உள்ளது - ராதாகிருஷ்ணன் - சுகாதாரத்துறை செயலாளர்

மதுரை: கரோனா தொற்று தொடர்வதும் குறைவதும் பொதுமக்கள் கையில்தான் உள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ias
ias

By

Published : Oct 13, 2020, 1:16 PM IST

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்ட பின், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ”இந்தியாவிலேயே கரோனா தொற்று படிப்படியாக குறைந்துவரும் மாநிலம் தமிழ்நாடுதான். இங்கு நாளொன்றுக்கு 95 ஆயிரம் மாதிரிகள் வரை பரிசோதிக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 188.8 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவை உள்ளது. ஆனால், ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் நம்மிடம் உள்ளது.

சென்னை, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. மதுரை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பாதிப்பு அளவு ஏறக்குறைய 5 விழுக்காட்டிற்கும் கீழே குறைந்துள்ளது.

மழைக்காலம் தொடங்க இருப்பதால், கரோனா மட்டுமன்றி டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்களும் பரவ அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே, மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். கரோனா தொடர்வதும் குறைவதும் நம் கையில்தான் உள்ளது“ என்றார்.

கரோனா தொடர்வதும் குறைவதும் மக்கள் கையில்தான் உள்ளது - ராதாகிருஷ்ணன்

தொடர்ந்து, தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த கேள்விக்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன், வரும் டிசம்பர் அல்லது 2021 ஜனவரிக்குள் மதிப்பீட்டாய்வுப் பணிகள் முடிந்துவிடும்.

ஆகையால் பணிகள் விரைவில் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக கூறினார். பேட்டியின்போது மாவட்ட ஆட்சியர் வினய், அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் சங்குமணி ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:கிம்ஸ் மருத்துவமனையுடன் ரேலா மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ABOUT THE AUTHOR

...view details