மதுரை:மின் கட்டண உயர்வு தொடர்பாக நீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து, மின்வாரியம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றக்கிளை, தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்டத்துறை உறுப்பினரை நியமிக்கும்வரை மின் கட்டண உயர்வு தொடர்பான மனு மீது, இறுதி உத்தரவு பிறப்பிக்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மின் கட்டண உயர்வு தொடர்பாக, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில்,தமிழ்நாடு மின்வாரியத்தின் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் 'தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்டத்துறை உறுப்பினரை நியமிக்கும் வரை மின் கட்டணம் உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்கத் தடை விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பணியிடம் காலியாகும் பொழுது அதற்கான நபர்களை தேர்வு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் பணியிடத்தை நிரப்பவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான நபரைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், இதனைக் கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி தடை உத்தரவு பிறப்பித்ததால், தமிழ்நாடு அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படும். ஆகவே, இவற்றைக் கருத்தில் கொண்டு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை இன்று (செப்.1) விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுந்தர், ஸ்ரீமதி ஆகியோர் அமர்வு, தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்டத்துறை உறுப்பினரை நியமிக்கும் வரை, மின் கட்டணம் உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்கத் தடை விதித்தும்; தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கும் இடைக்காலத் தடை விதித்தும் வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: நீதித்துறையில் ஊழல் உள்ளது எனும் கருத்தில் உறுதியாக இருக்கிறேன் - நேரில் ஆஜரான சவுக்குசங்கர் பதில்