திருச்சியைச் சேர்ந்த குருநாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சேவை பெறும் உரிமைச் சட்டம் அமலில் உள்ளது. இச்சட்டத்தை முறையாக அமல்படுத்துவதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இடையே வேறுபாடு உள்ளது. மத்தியப் பிரதேசம், கோவா போன்ற மாநிலங்கள் இதற்கென தனித் துறையை உருவாக்கியுள்ளன. ஒவ்வொரு பொதுச் சேவைக்கும் குடும்ப அட்டை, சாதிச் சான்று பெறுதல் எனப் பொதுமக்கள் அரசின் சேவையைப் பெற ஒவ்வொரு கால உச்சவரம்பு பின்பற்றப்படுகிறது.
சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக்கோரி வழக்கு
மதுரை: லஞ்சத்தைத் தவிர்ப்பதற்காக சேவை பெறும் உரிமைச் சட்டத்தை முறையாக அமல்படுத்தக்கோரிய வழக்கில், ஒவ்வொரு மாநிலத்திலும் முறைப்படுத்தப்பட்டுள்ள சட்ட நகல்களை மனுதாரர் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான மாநிலங்கள், குடும்ப அட்டையைப் பெற 30 நாள்கள் என உச்சவரம்பை கொண்டுள்ளன. ஆனால், ஹரியானாவில் குடும்ப அட்டைக்கு 15 நாள்கள், மின் இணைப்பிற்கு 8 நாள்கள், சாதிச் சான்றிற்கு 7 நாள்கள், நிலப்பதிவு, ஓட்டுநர் உரிமத்திற்கு ஒரு நாள், குடிநீர், கழிவுநீர் இணைப்பிற்கு 12 நாள்கள் எனக் குறைந்த கால உச்சவரம்பு பின்பற்றப்படுகிறது. அங்கு குறைந்த நாள்களிலேயே சேவை வழங்கப்படுகிறது.
ஆனால், மக்கள் நலத்திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்படும் தமிழ்நாட்டில் லஞ்சம் கொடுக்கும் நிலை உள்ளது. லஞ்சத்தைத் தவிர்ப்பதற்கு சேவை பெறும் உரிமை சட்டம் சிறந்த வாய்ப்பாகும். ஆனால், மக்களின் மனுக்கள் மீது அலுவலர்கள் உரிய காலகட்டத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதற்குக் காரணமான அலுவலர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்காமல், தவறான தகவல் தருதல், காலதாமதம் செய்தல், கடமையைச் செய்யத் தவறுதல் உள்ளிட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திடும் வகையிலான அதிகாரமிக்க வகையிலான சட்டத்தை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோர் மனுதாரர் தரப்பில் கூடுதல் ஆவணங்களை ஒவ்வொரு மாநிலத்தில் முறைப்படுத்தப்பட்டுள்ள சட்ட நகல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: பரிசீலிக்க என்ன இருக்கிறது? உடனே நிராகரியுங்கள்!