தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரையில் சட்ட விரோதமாக சூதாட்டம்: ரூ. 64,330 பறிமுதல்! - மதுரை

மதுரையில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ. 64 ஆயிரத்து 330 பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை
மதுரை

By

Published : Apr 30, 2021, 9:42 AM IST

மதுரை மாவட்டம், சிலைமான் பகுதியில் செயல்பட்டுவந்த தனியார் வணிக வளாகத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சிலைமான் சார்பு ஆய்வாளர் கார்த்திக், சிறப்பு சார்பு ஆய்வாளர் மார்ட்டின் வில்லியம்ஸ் ஆகியோர் தலைமையிலான காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

சிலைமான் காவல்துறை:

அப்போது சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. சூதாட்டத்தில் ஈடுபட்ட மதுரை மூன்றுமாவடியைச் சேர்ந்த ராம்தேவ் (43), ராகேஷ் குமார் (37), அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த வினோத் (52), கே.கே நகரைச் சேர்ந்த சுவில்குமார் (43) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த சிலைமான் காவல்துறையினர், அவர்களை கைதுசெய்து ரூ. 64 ஆயிரத்து 330 பணத்தை பறிமுதல் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details