மதுரை மலர்ச்சந்தை மதுரை மாவட்டம், தென் மாவட்டங்களின் பூ உற்பத்தியாளர்களின் சரணாலயமாகும். மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து நாள்தோறும் பூ வரத்து இங்கு இருக்கும்.
பூவின் வரத்து குறைந்ததால் உச்சத்தைத் தொட்ட மல்லிகைப்பூ விலை! - மதுரை மல்லி கிலோ ரூ. 2000
மதுரை: பூவின் வரத்து குறைந்ததால் மதுரை மல்லிகைப்பூவின் விலை கடும் உயர்வைச் சந்தித்தது. மல்லிகைப்பூ கிலோவிற்கு ரூ.2000-க்கு விற்பனையாகிறது.
flowers
உச்சம் தொட்ட மல்லிகை விலை
இந்நிலையில் இன்று (டிச. 21) மதுரை மலர்ச்சந்தைக்குப் போக்குவரத்து பெருமளவு குறைந்த காரணத்தால், மதுரை மல்லி கிலோ 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரளி ரூ.300, பிச்சிப்பூ ரூ.700, முல்லை ரூ.700, சம்பங்கி ரூ.120, செவ்வந்தி ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.120, பட்ரோஸ் ரூ.100 எனப் பூவின் விலை உயர்வு அடைந்துள்ளது.