தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரை ஜவுளி மில்லில் பயங்கர தீ விபத்து - fire accident at textile mill

மதுரை: விளாங்குடியில் பூட்டியிருந்த ஜவுளி மில்லில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினர் போராடி முழுவதுமாக அணைத்தனர்.

மதுரை ஜவுளி மில் தீ விபத்து
மதுரை ஜவுளி மில் தீ விபத்து

By

Published : Aug 4, 2020, 9:52 AM IST

மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி செல்வராஜ். இவருக்கு அதேபகுதியில் ஜவுளி மில் உள்ளது. இந்த மில் பல ஆண்டுகளாக பூட்டிக்கிடந்துள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு மில்லிலிருந்து புகை வருவதைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்தத் தகவலையடுத்து 5க்கும் மேற்பட்ட வாகனங்களில்அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கப் போராடினர். இருப்பினும், கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க முடியாததால் 10க்கும் மேற்பட்ட மாநகராட்சி தண்ணீர் வாகனங்களை வரவழைத்து தீயை அணைத்தனர்.

ஜவுளி மில்லில் பயங்கர தீ விபத்து

நள்ளிரவு ஒரு மணியளவில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. சேத மதிப்பு குறித்த விவரம் இன்னும் தெரியவில்லை. காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:அமேசான் தீ விபத்து: கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 28% அதிகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details