மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் கேசவன் என்பவர் உரம், பூச்சிக்கொல்லி மருந்துக்கடை நடத்திவருகிறார். நேற்று இரவு அவர் கடையில் கணினியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஐந்து லட்சத்திற்க்கும் அதிகமான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின.
தீவிபத்து ஏற்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து அனுப்பானடி தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
இருந்தும் இந்தத் தீ விபத்தில் கடையில் வைத்திருந்த உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், கணினி போன்ற மின்சாதனப் பொருள்கள் என ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. இந்தத் தீ விபத்து குறித்து பெருங்குடி காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கடையில் வைத்திருந்த கணினியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் காவல் துறையினர் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க: அட்டை மில்லில் தீ விபத்து - 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைப்பு