தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நிதி நிறுவனம் நடத்தி மோசடி: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்?- நீதிபதிகள் கேள்வி! - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.300 கோடிக்கும் மேல், மோசடி செய்தது தொடர்பான வழக்கில், முதல் நிலை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன் என மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 High Court Madurai Branch
High Court Madurai Branch

By

Published : Aug 24, 2020, 5:42 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் சக்கரவர்த்தி என்பவர், உயர் நீதிமன்ற கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "ராமநாதபுரத்தில் நீதிமணி, ஆனந்த் ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் இரட்டிப்பு பணம் தருவதாக தெரிவித்தனர்.

இதை நம்பி 19.9.2019-ல் 50 லட்சம் முதலீடு செய்தேன். அதற்கு உடன்படிக்கை பத்திரம், தேதி குறிப்பிடாமல் ஒரு கோடி மதிப்புள்ள காசோலைகள் தந்தனர். ஒரு ஆண்டுக்கு முடிந்ததும் காசோலையை வங்கியில் கொடுத்து பணம் வாங்கிக்கொள்ளுமாறும் தெரிவித்தனர்.

இந்நிலையில் நீதிமணி, மேனகா, ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் காவல் துறையினர், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.

நீதிமணி, ஆனந்த் கைது செய்யப்பட்டனர். இருவரும் பிணையில் வெளிவர வாய்ப்புள்ளது. வெளிநாடு தப்பிச்செல்லவும் வாய்ப்புள்ளது. எனவே நீதிமணி உள்ளிட்டோர் மீதான மோசடி வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், "தமிழ்நாடு முழுவதும் 800 பேரிடம் 300 கோடி அளவுக்கு பணம் வசூலித்து ஏமாற்றியுள்ளனர். சாதாரணப் பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி,"இந்த வழக்கில் பெரிய அளவில் மோசடி நடைபெற்றுள்ளது. ஆனால் இது வரை முதல் நிலை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details