மத்திய அரசின் வேளாண் சட்டத்தைக் கண்டித்து 'டெல்லி சலோ' என்கின்ற பெயரில் தலைநகர் டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணியாகச் செல்கின்றனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மதுரை திருநகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிஐடியு, விவசாயிகள் சங்கம் ஆகியவை சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர் போராட்டக்காரர்கள் திருநகர் பகுதியில் உள்ள கனரா வங்கி முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றபோது காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.