தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போலி பொருள்கள் தயாரிப்பு - ஒருவர் கைது - godown

மதுரையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி பொருள்கள் தயாரித்து விற்பனை செய்தவரை காவல்துறையினர் காவல் செய்தனர்.

போலி பொருள்கள் தயாரிப்பு
போலி பொருள்கள் தயாரிப்பு

By

Published : Jul 17, 2021, 3:23 PM IST

மதுரை : பிரபல நிறுவனங்களின் பெயரில் தேயிலைத் தூள், பெருங்காய பவுடர், பற்பொடி மற்றும் மூக்கு பொடி உள்ளிட்ட பொருள்களை போலியாக தயாரித்து சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன.

இதன் அடிப்படையில் மதுரை புது ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் பண்டகசாலையில் தனிப்படை காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

போலி பொருள்கள் தயாரிப்பு

அப்போது பிரபல நிறுவனங்களின் பெயரில் மூட்டை மூட்டையாக டீ தூள் மற்றும் காபி பொடி, பெருங்காயம், மூக்குப்பொடி உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

போலி பொருள்கள் தயாரிப்பு
அதனைத் தொடர்ந்து, போலி பொருள்கள் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் இயந்திரங்களை பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினர், சௌந்தர பாண்டியன் என்பவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க :இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - அமைச்சர் கே.என்.நேரு

ABOUT THE AUTHOR

...view details