மதுரைதெற்கு ரயில்வே திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவையை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் இன்று (ஆக.27) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு வாராந்திர சிறப்பு ரயில் சேவையை ஜனவரி மாதம் வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (06030) செப்.1 முதல் ஜன.26 வரை வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி வாராந்திர சேவை (06029) சிறப்பு ரயில் செப்.2 முதல் ஜன.27 வரை வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்திலிருந்து இரவு 07.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.45 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். இந்த ரயில்கள் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் போத்தனூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.