தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நெருங்குவதையொட்டி கட்சியினரை சந்திக்க பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா நேற்று மதுரை வந்தார். இன்று, அக்கட்சியின் மாநில உயர்மட்டக் குழு நிர்வாகிகளுடன் தனியார் விடுதியில் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தக் கூட்டத்தில் தமிழக பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநிலத்தலைவர் எல்.முருகன், துணைத்தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன், நயினார் நாகேந்திரன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணி, அதிமுகவிடம் கேட்டுப் பெற வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை, வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள், வேட்பாளர்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் வியூகம்! ஜே.பி.நட்டா மதுரையில் ஆலோசனை! முன்னதாக, இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த நட்டா, பின்னர் கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இன்று மாலை நடக்கவுள்ள பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று அவர் உரையாற்றவுள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 'ஊர்ந்து வந்தது உண்டா இல்லையா?' - மு.க. ஸ்டாலின்