இந்தியாவின் 17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.
ரூ. 3.64 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்! - 2019 நாடாளுமன்றத் தேர்தல்
மதுரை: வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ. 3.64 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
mdu
அனைத்து இடங்களிலும், தேர்தல் அலுவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதுரை மேற்குப் பகுதியில் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ. 3.64 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து தேர்தல் அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர்.