தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சீர்மிகு நகரம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - திமுக எம்எல்ஏ கோரிக்கை - பழனிவேல் தியாகராஜன்

மதுரை: சீர்மிகு நகரம் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க மதுரை மத்திய தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

mla
mla

By

Published : Sep 24, 2020, 5:15 PM IST

மதுரை மாநகரில் சீர்மிகு நகரம் திட்டத்தின் ஒரு பகுதியாக மாசி வீதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்காகத் தோண்டப்பட்ட பள்ளங்கள் பல நாள்களாகியும் மூடப்படாததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமங்களைச் சந்தித்துவருகின்றனர்.

இந்நிலையில் இன்று, மேலமாசி வீதி மக்கான் தோப்பு பகுதியில் இப்பணிகளை ஆய்வுசெய்த, மதுரை மத்திய தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன், ”சீர்மிகு நகரம் திட்டப்பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுகிறது.

குறிப்பாக பாதாள சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் இருப்பதால், மாசி வீதிகளில் வாகனங்கள் சென்றுவர இயலவில்லை.

சீர்மிகு நகரம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - திமுக எம்எல்ஏ கோரிக்கை

இதனால், மழைக்காலத்தில் விபத்துகள் ஏற்படும் சூழலும் இருப்பதால், பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி நிர்வாகம் விரைந்து முடிக்க வேண்டும் “ என்று கேட்டுக்கொண்டார்.

பின்னர், 80ஆவது வார்டு சம்பந்த மூர்த்தி தெருவில் சேதமடைந்த சாலையில் நடக்கும் சீரமைப்புப் பணிகளையும், பழனிவேல் தியாகராஜன் ஆய்வுசெய்தார்.

இதையும் படிங்க: சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்கள்: தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பதிலளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details