தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது - உயர் நீதிமன்ற மதுரை கிளை - மதுரை மாவட்ட செய்திகள்

அரசு மதுபானக் கடைகளை மூடக்கோரிய வழக்கில், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற  மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை

By

Published : Jul 31, 2021, 9:04 PM IST

மதுரை: விருதுநகரைச் சேர்ந்த காந்திராஜன் என்பவர், 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், கடந்த 2016ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு வாக்குறுதி அளிக்கப்பட்டது.

பின்னர் தேர்தலில் வென்று அதிமுக ஆட்சியை பிடித்தது. இருந்த போதிலும் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மதுக்கடைகளால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். மது பழக்கத்தால் ஏராளமான இளைஞர்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் தேர்தல் அறிக்கையில் கூறியபடி அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி எஸ்.ஆனந்தி அடகிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.பின்னர், டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவது என்பது அரசின் கொள்கை முடிவுடன் தொடர்புடையது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி மனுவை முடித்து வைத்து தலைமை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:நீர்நிலைகள் அழிக்கப்படுவதை இனியும் ஏற்க முடியாது - நீதிபதிகள் கண்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details