இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல மனுவில், "2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைப்படி, 29% 14 வயது குழந்தைகளில், 10% குழந்தைகள் குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு செல்வதால் அவர்களின் கல்வி, உடல்நலம், உணவுத்தேவை ஆகியவை முறையாக கிடைப்பதில்லை. தஞ்சாவூர் பகுதியில் 2 சிறுவர்கள் ஆயிரக்கணக்கான ஆடுகளை மேய்க்கும் கூலித் தொழிலாளர்களாக இருந்துள்ளதும், அவர்களை மீட்டு விசாரித்தபோது, வீடு கட்டுவதற்காக குடும்பத்தினரே அவர்களை ஆடு மேய்க்க அனுப்பியதும் தெரிய வந்தது.
எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள குழந்தை பாதுகாப்பு மற்றும் குழந்தை தொழிலாளர் முறையை கண்காணிக்கும் அதிகாரிகள், அந்தந்த மாவட்டங்களில் முறையாக கண்காணிப்பு பணிகளை செய்யவும், சட்ட விரோத நடவடிக்கைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவும், மீட்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வுக்காக 2 லட்சம் நிதி அளிப்பதோடு, மேலும் அவர்களுக்கு கட்டாயக்கல்வி திட்டத்தை அமல்படுத்தவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.