இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா பேரிடர் காலத்தில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. அரசு அலுவலகங்களோ மிகக்குறைந்த ஊழியர்களோடு இயங்கி வருகிறது. உயிரிழந்தவர்களின் விவரங்களை பதிய உறவினர்கள் படாதபாடு படுகிறார்கள்.
அபாராதத் தொகையைவிடக் கொடியது மண்டல அலுவலகத்துக்கும், வார்டு அலுவலகத்துக்குமான அலைச்சல். உயிரிழப்புகளை சந்தித்துள்ள வீடுகளில் உலராத கண்ணீரோடு உறவினர்கள் தேங்கிக் கிடக்கின்றனர். அவர்களை அழுத கண்ணீரோடு அலையவிட வேண்டாம்.