தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சித்திரைத் திருவிழா: ஆடி வீதியில் பவனி வந்த சுவாமியும் அம்மனும்

மதுரை: சித்திரைத் திருவிழாவின் ஆறாம் நாளான இன்று தங்க ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்மனும் ஆடி வீதியில் பவனி வந்தனர்.

ஆடி வீதியில் பவனி வந்த சுவாமியும் அம்மனும்
ஆடி வீதியில் பவனி வந்த சுவாமியும் அம்மனும்

By

Published : Apr 21, 2021, 8:18 AM IST

உலகப் பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களின் முக்கிய நிகழ்வான சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக விழாக்கள் நடைபெறும் நேரங்களிலும், சுவாமி புறப்பாடு நேரங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சித்திரைத் திருவிழாவில் நாள்தோறும் சுவாமியும், அம்மனும் சிம்ம வாகனம், அன்ன வாகனம், தங்க குதிரை வாகனம் என எழுந்தருளி கோயில் ஆடி வீதிகளில் பவனி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆறாம் நாளான இன்று பிரியாவிடை அம்மனுடன், சுந்தரேஸ்வரர் தங்க ரிஷப வாகனத்திலும், மீனாட்சிஅம்மன் தனியே வெள்ளி ரிஷப வாகனத்திலும் திருவீதிகளில் பவனி வந்தனர்.

முன்னதாக சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. கரோனா எதிரொலியாகப் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோயில் நிகழ்ச்சிகளை இணையதளத்தில் மட்டும் பார்க்கலாம் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்து கோயில் இணையதளம், யூ-ட்யூபில் நேரலைசெய்யப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details