மதுரை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்
முதலமைச்சரின் வாகன அணிவகுப்பு பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் போது, வழியில் இரண்டு பக்கமும் விவசாயப் பணிகளில் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது முதலமைச்சர் தனது வாகனத்தை நிறுத்தி இறங்கி சென்று அப்பெண்களிடம் உரையாடினார்.
ஆட்சி பற்றி விசாரித்த முதலமைச்சர் அப்போது அவர்களிடம் தமிழ்நாடு அரசின் செயல்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்தப் பெண்கள், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி தமிழ்நாடு அரசு மக்களுக்கு ஆதரவான ஆட்சியை நடத்துகிறது. அது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது என பதிலளித்தனர்.
அதேசமயம் அப்பெண்கள், தங்கள் பகுதிகளில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்து தருமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: உசிலம்பட்டி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க. ஸ்டாலின்