தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முழு கட்டணத்தை கேட்கும் பள்ளிகள் - சிஇஓ சுவாமிநாதன் எச்சரிக்கை - கல்விக் கட்டணம்

மதுரை: ஓர் ஆண்டு கல்விக் கட்டணத்தை முழுமையாக கேட்டு வற்புறுத்தும் தனியார் பள்ளிகள் குறித்து பெற்றோர், மாணவர்கள் புகார் தெரிவிக்கலாம் என மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

CEO has warned private schools
CEO has warned private schools

By

Published : Sep 2, 2020, 11:43 PM IST

மதுரை மாவட்டத்தில் ஓராண்டு கல்வி கட்டணத்தை முழுமையாக கேட்டு வற்புறுத்தும் தனியார் பள்ளிகள் குறித்து பெற்றோர் மாணவர் தரப்பில் புகார் சென்றதை அடுத்து மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதுகுறித்த விபரம் வருமாறு, மதுரை மாவட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரின் பெற்றோர்களிடம் முழு தொகையையும் கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது. மாணவ, மாணவியரின் பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகமானது தவணை முறைகளில்தான் வசூலிக்க வேண்டும்.

இது தொடர்பாக பள்ளிகளின் மீது புகார் செய்ய விரும்புவோர் மதுரை தமுக்கம் எதிரே அமைந்துள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் தகுந்த ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு புகார் தெரிவிக்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், feegrievancecellmdu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் பெற்றோர்கள் மாணவர்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details