தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Paddy Procurement Centers: நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு குறித்து எடுத்த நடவடிக்கைகள் என்ன? - நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

Paddy Procurement Centers: நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பது குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கிருபாகரன் அமர்வு அளித்த உத்தரவில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்

By

Published : Jan 4, 2022, 1:42 PM IST

Paddy Procurement Centers: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர் மழை மிரட்டுவதால், விரைந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பது தொடர்பான நாளிதழ் செய்தியை சுட்டிக்காட்டி கிராமங்களில் நெல் கொள்முதல் மையங்களை திறந்து, தாமதமின்றி கொள்முதல் செய்வது தொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி கிருபாகரன் அமர்வு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்பது குறித்து விபரங்களை அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்.

இது குறித்து இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பது குறித்து முடிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, இது தொடர்பாக அறிக்கையளிக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க:தடுப்பூசி போட்டும் ஒமைக்ரான் பாதிப்பு இருந்தால் வீட்டிலேயே இருங்கள் - மா.சு அறிவுரை

ABOUT THE AUTHOR

...view details