தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஸ்ரீவில்லிபுத்தூர் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை சுற்றிலும் கான்கிரீட் சுற்றுச்சுவர் அமைக்க கோரிய வழக்கு.. - madurai high court

ஸ்ரீவில்லிபுத்தூர் துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ளும் பகுதிக்கும் நெடுஞ்சாலைக்கும் எவ்வளவு தூரம் உள்ளது என்பது குறித்து அளவீடு செய்து புகைப்படத்துடன் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை சுற்றிலும் அதிக உயரத்திற்கு கான்கிரீட் சுற்றுச்சுவர் அமைக்க கோரிய வழக்கு..
ஸ்ரீவில்லிபுத்தூர் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை சுற்றிலும் அதிக உயரத்திற்கு கான்கிரீட் சுற்றுச்சுவர் அமைக்க கோரிய வழக்கு..

By

Published : Jun 10, 2022, 9:51 AM IST

மதுரை:விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசுப்பு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இதன் சுற்றுப்பகுதியில் பல கிராமங்கள் அமைந்துள்ளன.

சாம்பல் நிற அணில்கள் சரணாலயமும் உள்ளது. எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். இப்பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் துப்பாக்கி குண்டு பாய்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை சுற்றிலும் அதிக உயரத்திற்கு கான்கிரீட் சுற்றுச்சுவர் அமைக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை

இந்த மனுவை நேற்று (ஜூன்.9) நீதிபதிகள் பிரகாஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர். அப்போது, அரசு தரப்பில், மலைப்பகுதியை நோக்கித்தான் பயிற்சி நடக்கிறது. 70 ஆண்டுக்கு மேலாக இந்த பயிற்சி மையம் இயங்குகிறது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பயிற்சி மேற்கொள்ளும் பகுதிக்கும் நெடுஞ்சாலைக்கும் எவ்வளவு தூரம் உள்ளது என்பது குறித்து அளவீடு செய்து புகைப்படத்துடன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள். விசாரணையை ஜூன் 29க்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: காவல் துறை புகார் ஆணையம்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க இறுதி அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு..!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details