இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் தாக்கல் செய்திருந்த மனுவில், "கடந்த 2018ல் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதாகக் கூறி, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சட்டத்தை மீறும் வகையிலோ, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையிலோ எவ்வித செயலிலும் ஈடுபடாத நிலையில், வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்ட கமல் மீதான வழக்கு ஒத்திவைப்பு!
மதுரை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
kamal
இந்த வழக்கு இன்று நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடியையும் வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்பேன் - அமைச்சர் செல்லூர் ராஜு