தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நகைக்காக மூதாட்டியைக் கொடூரமாகக் கொன்ற சிறுவர்கள்!

மதுரை: நகைக்காக மூதாட்டியைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் 15 வயது சிறுவர்கள் இருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Boys brutally killed old lady for jewelry in madurai
Boys brutally killed old lady for jewelry in madurai

By

Published : Jul 31, 2020, 3:25 AM IST

மதுரை நேரு நகர் பகுதியில் கடந்த ஜூலை 16ஆம் தேதி பஞ்சவர்ணம் என்ற மூதாட்டியை வீட்டிற்குள் புகுந்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த ஆறு சவரன் நகை, 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டுவந்தது.

இந்நிலையில், மதுரை ஆனையூர் பகுதியைச் சேர்ந்த அழகம்மாள், அவருடைய 15 வயது மகன், அவருடைய அண்ணன் மகன், மேலும் கொள்ளைச் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்ட முக்கியக் குற்றவாளியான ராஜேஷ் கண்ணன் ஆகியோரைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ABOUT THE AUTHOR

...view details