மதுரை:சுவாசக் கோளாறு காரணமாக கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, மதுரை ஆதீனத்தின் 292ஆவது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு (ஆக.13) காலமானார். இதனையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே அமைந்துள்ள மதுரை ஆதீன மடத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு, ஆதீனத்தின் உடலுக்கு கோவை காமாட்சிபுர ஆதினம், திருவாவடுதுறை ஆதினம், இளைய மதுரை ஆதீனம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினா். இதனையடுத்து ஆதீன மடத்தின் உள்புறத்தில் அருணகிரிநாதரின் உடல் சித்ராசனத்தில் அமர்ந்த நிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மதுரை ஆதீனம் - அருணகிரிநாதரின் உடலுக்கு மடாதிபதிகள் நேரில் அஞ்சலி - Madurai Adheenam chief pontiff death
உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் உடலுக்கு பல்வேறு ஆதீனங்களின் மடாதிபதிகளும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மதுரை ஆதீனத்தின் உடலுக்கு ஆதீன மடாதிபதிகள் நேரில் அஞ்சலி
பத்து நாள்களுக்குப் பிறகு மதுரை ஆதினத்துக்கான புதிய பீடாதிபதிக்கு பட்டம் சூட்டப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அருணகிரிநாதர்- சில தகவல்கள்:
- இவர் இலங்கை நுவரெலியாவில் தொண்டைமண்டல குடும்பத்தில் பிறந்து 12 வயதில் தமிழ்நாடு வந்து பல ஆன்மீகப் பணிகளை மேற்க்கொண்டவர்.
- இவர் 10க்கும் மேற்பட்ட பிற மொழிகளை எழுத, படிக்க, பேசத்தெரிந்தவர்.
- இவர் மாலை முரசு நாளிதழில் செய்தியாளராகப் பணியாற்றியவர்.
- ”தமிழும், சைவமும் இரு கண்கள்” என வாழ்ந்த மதுரை ஆதீனம் மத நல்லிணக்கத்தை ஆயுள்காலம் முழுவதும் கடைபிடித்தவர். ஆன்மிகம் கடந்து சமூக கருத்துகளையும் முன்வைத்தார்.
- திருமறையின் தோற்றுவாய், சூரத்துல் ஃபாத்திஹாவை அர்த்தத்துடன் மனப்பாடம் செய்து பொது மேடைகளில் அடிக்கடி உதாரணம் காட்டுபவர்.
- இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் பல மேடைகளில் பெருமைப்படுத்திய இவர் அனைத்து மதத்தினரையும் அரவணைத்து சென்றார்.
Last Updated : Aug 14, 2021, 2:28 PM IST