மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112வது ஜெயந்தி விழா மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவரின் திருவுருவச் சிலைக்கு மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பாக ஸ்ரீதர் வாண்டையார் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் கோரிப்பாளையம் தேவர் சிலை முன்பாக காவல் துறையினர் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அரணை தாண்டி மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் துறையினர் அவர்களை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி அருகிலிருக்கும் சங்கீதா பிளாசா பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுமாறு கூறியதையடுத்து தற்போது ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றுவருகிறது.