தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரை - ராமேஸ்வரம் இடையே மேலும் ஒரு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்! - Another special train between Madurai and Rameswaram

மதுரை - ராமேஸ்வரம் இடையே மேலும் ஒரு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் மற்றும் கொல்லம் - புனலூர், கன்னியாகுமரி - ராமேஸ்வரம் ஆகிய தலங்களிலும் புதிய சேவையை தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அதிகப்படுத்தியுள்ளது.

சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்

By

Published : Jun 18, 2022, 9:47 PM IST

மதுரை:ராமேஸ்வரம் - மதுரை, கொல்லம் - புனலூர், கன்னியாகுமரி - ராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சேவையை அதிகரிக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

1. ராமேஸ்வரம் - மதுரை - ராமேஸ்வரம் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் ஜூன் 22 முதல் இயக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் இந்த பகுதியில் மூன்று ஜோடி முன்பதிவில்லாத ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி ராமேஸ்வரம் - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06652) ராமேஸ்வரத்திலிருந்து காலை 11.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.40 மணிக்கு மதுரை வந்து சேரும். மறுமார்க்கத்தில் மதுரை - ராமேஸ்வரம் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06653) மதுரையிலிருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு மாலை 04.10 மணிக்கு ராமேஸ்வரம் சென்று சேரும் இந்த ரயில்கள் பாம்பன், மண்டபம், மண்டபம் கேம்ப், உச்சிப்புளி, வாலாந்தரவை, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, ராஜகம்பீரம், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், சிலைமான், கீழ் மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 9 இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும்.

சிறப்பு ரயில்

2. ராமேஸ்வரம் - கன்னியாகுமரி - ராமேஸ்வரம் வாரம் மும்முறை சேவை அதிவிரைவு ரயில்கள் ராமேஸ்வரத்தில் இருந்து ஜூன் 27 முதலும் கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 28 முதலும் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி ராமேஸ்வரம் - கன்னியாகுமரி வாரம் மும்முறை சேவை அதிவிரைவு ரயில் (22621) ராமேஸ்வரத்திலிருந்து திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.15 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். மறுமார்க்கத்தில் கன்னியாகுமரி - ராமேஸ்வரம் வாரம் மும்முறை சேவை அதிவிரைவு ரயில் (22622) கன்னியாகுமரியில் இருந்து செவ்வாய் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 05.35 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும். ராமேஸ்வரம் - கன்னியாகுமரி ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கன்னியாகுமரி - ராமேஸ்வரம் ரயில் நாகர்கோவில், வள்ளியூர், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுத்திய வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படும்.

3. கொல்லம் - புனலூர் - கொல்லம் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் ஜூன் 22 முதல் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி கொல்லம் - புனலூர் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06666) கொல்லத்தில் இருந்து மாலை 05.30 மணிக்கு புறப்பட்டு மாலை 06.55 மணிக்கு புனலூர் வந்து சேரும். மறுமார்க்கத்தில் புனலூர் - கொல்லம் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06661) புனலூரில் இருந்து இரவு 07.45 மணிக்கு புறப்பட்டு இரவு 09.05 மணிக்கு கொல்லம் சென்று சேரும். இந்த ரயில்கள் அவனீஸ்வரம், குறி, கொட்டாரக்கரா, எழுகோன், குன்டரா கிழக்கு, குன்டரா, சந்தன தோப்பு, கிளிகொல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நெல்லையில் கந்துவட்டி வசூலித்த திமுக முக்கிய பிரமுகர் கைது

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details