தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அமமுக நிர்வாகியின் சகோதரருக்கு சொந்தமான நிறுவனங்களில் ரெய்டு! - தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்

மதுரை: அமமுக நிர்வாகி சகோதருக்கான அரசு ஒப்பந்ததாரருக்கு சொந்தமான திரையரங்கு உள்ளிட்ட 12 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அமமுக நிர்வாகி தம்பிக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை!
அமமுக நிர்வாகி தம்பிக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை!

By

Published : Mar 4, 2021, 7:50 AM IST

Updated : Mar 4, 2021, 9:31 AM IST

அமமுக மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், உசிலம்பட்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மகேந்திரனின் சகோதரரான வெற்றியின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான வெற்றி என்பவருக்கு சொந்தமான திரையரங்குகள் கட்டுமான நிறுவனம் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட 12 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், தேர்தலுக்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் 12 குழுக்களாக சென்று சோதனை நடத்தினர். அவர்களுடன் மதுரை மாநகர காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க...அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவிப்பு!

Last Updated : Mar 4, 2021, 9:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details