மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், ”தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வென்று மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும். பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது சுழற்சி முறையில் ஆனது. சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப விலை நிலவரங்கள் மாறிக்கொண்டே இருக்கும். கடந்த 2011 - 2014 ஆகிய காலகட்டத்தில் ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.1,240 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.750 என்ற அளவில் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்! - மத்திய அமைச்சர் வி.கே.சிங் - அதிமுக பாஜக கூட்டணி
மதுரை: வரும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் ஆதரவுடன் அதிமுக-பாஜக கூட்டணி வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
vk singh
பெட்ரோல் விலை உயர்வு மக்களை பாதிக்காமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவகிறது. மேலும், அதன் ஒரு பகுதியாக பெட்ரோல் டீசல் விற்பனையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கான ஆலோசனையும் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக மாநிலங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: கே.எஸ். அழகிரியை அழவைத்த திமுக! காங். செயற்குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?