மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மதுரையில் உள்ள பொழுதுபோக்கு வணிக அரங்கில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் ‘ஓபன் மைக்’ என்ற நிகழ்ச்சி மூலம் கலந்துரையாடல் செய்தார்.
பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் - அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன்! - ADMK contestant rajasathyan
மதுரை: பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என இறுதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய ராஜ்சத்யன், மதுரையை புதுமையாகவும், இளைஞர்களுக்கான நகரமாக மாற்ற தேவையான முயற்சிகள் எடுக்கப்படும். வளர்ந்து வரும் நகரில் குடிநீர் தேவைக்கு அம்ருத் திட்டம் மூலம் 24 மணி நேரம் தண்ணீர் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதில் ஒரு வருடத்தில் பணிகள் முடிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்கள் தெரியாதபடி இருக்கப்பட வேண்டும் எனவும் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் கூறினார்.