தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு உயர் கல்வி நிதி குறித்த வழக்கு: விசாரணையை ஒத்திவைத்து உத்தரவு - madurai high court

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான பொருளாதார தேவையைப் பூர்த்தி செய்ய அரசு ஒதுக்கியிருந்த 927 கோடி ரூபாயை மீண்டும் அந்தத் துறை மாணவர் உயர்கல்விக்காகவும் நலத்திட்டங்களுக்காகவும் செலவிடக்கோரி வழக்கு விசாரணையை ஜூன் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு உயர்கல்வி நிதி குறித்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு உயர்கல்வி நிதி குறித்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவு

By

Published : Jun 6, 2022, 6:36 PM IST

மதுரை: மதுரையைச் சேர்ந்த எஸ்.கார்த்திக் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கும் உயர்கல்வி பெறுவதற்கான பொருளாதார தேவை, முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத நிலையில், நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை பயன்படுத்தப்படாமல் திருப்பி ஒப்படைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுசம்பந்தமாக அந்த துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, கடந்த 8 ஆண்டுகளில், வெளிநாடுகளில் பி.ஹெச்டி., படிப்பதற்கான உதவித்தொகை திட்டத்திற்கு 18 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 3 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, ரூ.2.65 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ.99 லட்சம் அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களுக்காக ஒதுக்கிய தொகையில் பயன்படுத்தப்படாமல் ரூ.927 கோடியை அரசிடம் திரும்ப ஒப்படைத்துள்ளதாக, இந்தத்துறை தகவல்கள் அளிக்கின்றன. இந்தத் தொகையை மீண்டும் பெற்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் உயர் கல்விக்குப் பயன்பெறும் வகையில் நிவாரண உதவியாக வழங்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பி.என்.பிரகாஷ், ஆனந்தி அமர்வு, பயன்படுத்தப்படாத பணத்தை மீண்டும் அரசிடம் ஒப்படைப்பது தானே முறை? திட்டங்கள் குறித்து முறையாக அறிவிக்கப்படுகிறதா? எனவும் கேள்வி எழுப்பினர். அரசுத்தரப்பில், இணையதளத்தில் அது தொடர்பான முழு விவரங்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு இதற்கென புதிய இணையதளத்தை உருவாக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து திட்டங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள், இணையதளத்தில் முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்யலாம். அந்த வெளிப்படைத் தன்மை இருக்கும்போதுதான், யாரேனும் முறைகேடாக பயன்படுத்தினால், அது குறித்தும் தெரியவரும்’ என குறிப்பிட்ட நீதிபதிகள் அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:'நபிகள் நாயகத்தை அவமதித்த பாஜக நிர்வாகிகளை பயங்கரவாதத்தடுப்புச்சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details