விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த பிரியா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், நான் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்களின் கூட்டமைப்பின் தலைவராக உள்ளேன். விருதுநகர் மாவட்டத்தைப் பொருத்தவரை கட்டுமான தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிற்சாலைகள், பட்டாசு தொழிற்சாலைகள், நூற்பாலைகள், அச்சகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களே அதிகமாக உள்ளனர்.
நிவாரண தொகையை உயர்த்திக் கேட்ட வழக்கு தள்ளுபடி - Judge Prakash, pugazhendhi
மதுரை: கரோனா நிவாரணத் தொகை 1,000 ரூபாயிலிருந்து ஒன்பதாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்த சூழலில் அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் என்பது மூன்று நேர உணவைக் கூட முழுதாக உண்ண போதுமானதாக இல்லை. ஆகவே இவற்றையும் உயர்ந்து வரும் விலைவாசியையும் கருத்தில் கொண்டு, அரசு வழங்கும் நிவாரணத் தொகையை ஆயிரம் ரூபாயிலிருந்து ஒன்பதாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.