மதுரை:சித்திரைத் திருவிழாவின் 9ஆம் நாளான இன்று (ஏப்.13) மீனாட்சி அம்மனின் திக்கு விஜயம் இந்திர விமான வாகனத்தில் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு நான்கு மாசி வீதிகளையும் வலம் வந்த அம்மன், அரசர்கள் பலரையும் வென்று அட்டதிக்கு பாலகர்களை முறியடித்த காட்சி நிகழ்த்தப் பெற்றது.
சித்திரைத் திருவிழாவின் 9ஆம் நாள்: சொக்கநாதரிடம் மயங்கிய தடாதகைப் பிராட்டி;ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் - சொக்கநாதரிடம் மயங்கிய தடாதகைப் பிராட்டி
அரசர்களையும், அட்டதிக்கு பாலகர்களையும் வென்ற மீனாட்சியம்மன், சொக்கநாதரைப் போரில் நேருக்கு நேராக சந்தித்தபோது, மயங்கிய சித்திரைத் திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்வு இன்று (ஏப்.13) வெகுசிறப்புடன் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
அதன்படி, கீழமாசி வீதியில் இந்திரனையும், கீழமாசி தெற்குமாசி வீதிகளின் சந்திப்பில் அக்னியையும், தெற்குமாசி வீதியில் எமனையும், தெற்கு மேலமாசி வீதிகளின் சந்திப்பில் நிருதியையும், மேலமாசி வீதியில் வருணனையும், மேல வடக்குமாசி வீதிகளின் சந்திப்பில் வாயுவையும், வடக்குமாசி வீதியில் குபேரனையும், வடக்கு கீழமாசி வீதிகளின் சந்திப்பில் ஈசானனையும் வெற்றி கொண்டு பின் நந்தி தேவரையும் மீனாட்சி வெற்றி கொள்கிறாள்.
பின், சொக்கநாதரே போருக்கு வர அவரைக் கண்டவுடன் தடாதகை பிராட்டியான மீனாட்சி நாணம் கொள்ள, அவளது மூன்றாவது தனம் மறைவதாக ஐதீகம். நான்கு மாசி வீதிகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று அன்னை மீனாட்சி அம்மனைத் தரிசித்தனர்.
இதையும் படிங்க: 'என்னது.. அழகர் மதுரைக்குள்ள வந்தாரா..?' - அழகரின் ஆயிரமாண்டு வரலாறும் வியப்பில் ஆழ்த்தும் சிறப்பு தொகுப்பும்