தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தள்ளாத வயதிலும் ஊராட்சி மன்றத் தலைவராக வென்று காட்டிய வீரம்மாள்! - madurai veerammal

மதுரை: அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத்தின் தலைவராக 79 வயது மூதாட்டி வீரம்மாள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

79 years old lady won in Local body elections, madurai old lady won, ஊராட்சி மன்ற தலைவர் வீரம்மாள், madurai veerammal, மதுரை மேலூர் வீரம்மாள்
79 years old lady won in Local body elections

By

Published : Jan 2, 2020, 7:37 PM IST

Updated : Jan 3, 2020, 4:58 PM IST

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

இதில் மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்திற்குள்பட்ட அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 79 வயது மூதாட்டி வீரம்மாள் போட்டியிட்டார். இதில் அவர் இன்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரைக் காட்டிலும் 195 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அலுவலர் சான்றிதழை வழங்கியுள்ளார்.

வெற்றி வாகை சூடிய முதல் திருநங்கை கவுன்சிலர் ரியா!

இந்த பதவிக்காக இவர் இரு முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் விடாமுயற்சியுடன் போராடி மூன்றாவது முறையாக போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jan 3, 2020, 4:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details